மதுரை: கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்

மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், கோரிப்பாளையம் சந்திப்பில் வைகை ஆற்றுக்குள் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பாலம் பிப்ரவரி மாத இறுதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, ஜனவரி 10 அல்லது 11 ஆம் தேதி முதல் கோரிப்பாளையம் சாலையை, மீனாட்சி கல்லூரி சந்திப்பில் உள்ள பாலத்துடன் இணைக்கும் பணிகள் தொடங்குகின்றன. இதனால், கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி