ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு பேருந்து கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டதாக கூறப்பட்ட தகவலுக்கு தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. ராஜபாளையம்-திருச்சி வழித்தடத்தில் இயங்கும் குளிர்சாதன பேருந்தில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், இது வழக்கமான கட்டணம் என்றும், எந்தவித கூடுதல் கட்டண உயர்வும் செய்யப்படவில்லை என்றும் மதுரை போக்குவரத்துக்கழக விருதுநகர் மண்டல உதவி மேலாளர் தெரிவித்துள்ளார்.