மதுரை: பெரும்பான்மை தொகுதிகளில் தவெக வெற்றி பெறும் - அருண்ராஜ்

மதுரையில் திருமண விழாவில் பங்கேற்ற தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் பெருகிவரும் ஆதரவால் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது கழகத்தின் கொள்கை முடிவு. கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள் என எதிர்பார்த்து அதனை அறிவிக்கவில்லை.  தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி