மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைச்சராக இருந்தும் மத்திய தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கழிவறை வசதி கூட ஏற்படுத்தி தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மதுரை வளர்ச்சிக்கு உங்களை செயல்பட விடாமல் தடுக்கிறார்கள் என்றால், ஏன் அந்த கட்சியில் வேட்பாளராக நிற்கிறீர்கள்? என்றும் சுந்தர் சி. கேள்வி எழுப்பினார்.