மதுரை: கல்லூரி முன்பு கடவுளே அஜித்தே என கோஷமிட்ட மாணவிகள்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மீனாட்சி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வாசல் முன்பாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மகளிர் அணி நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெண்களுக்காக எழுதிய கடிதத்தின் நகல்களை நிர்வாகிகள் மாணவிகளிடம் வழங்கினர். அப்போது கடிதத்தை பெற்றுக்கொண்ட மாணவிகள் சிலர் கடவுளே அஜித்தே என்று முழக்கமிட்டுச் சென்றனர். தமிழக வெற்றி கழக நிகழ்வில் அஜித்தே கடவுளே என மாணவிகள் கோஷம் எழுப்பிய சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியது.

தொடர்புடைய செய்தி