மதுரை: கல்வி உதவித்தொகை வழங்காததால் ஆட்சியரிடம் மாணவி நேத்ரா மனு

மதுரை மாணவி நேத்ரா, கொரோனா காலத்தில் உயர்கல்விக்காக சேமித்த 5 லட்சம் ரூபாயை ஏழைகளுக்கு வழங்கினார். பிரதமர் மோடி பாராட்டிய நிலையில், தமிழக அரசு 10ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை செலவை ஏற்பதாக அறிவித்தது. ஆனால், 11, 12ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரி முதலாம் ஆண்டுக்கான கல்வி செலவை அரசு வழங்கவில்லை. இதனால் படிப்பைத் தொடர முடியாத நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேத்ரா இன்று மனு அளித்தார். "எனது படிப்பிற்கு அரசு தொகையை விரைவில் வழங்க வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்தி