பேசுவது புரியாது ஆனாலும் இடைவிடாமல் கேட்போம், ஜானகி அம்மா நான் எல்லாம் ஒன்னா பேசிருக்கோம், தோழர் ஜீவாவின் பேச்சை கேட்டிருக்கேன்.
தோழர் ஜீவா உருவாக்கிய கலை இலக்கிய பெருமன்றத்தில் எனக்கு முதல்மேடை கிடைத்தது.
அழுத்தமான பேச்சாளர்கள் திமுகவின் தான் மக்கள் அவர்களது பேச்சை கேட்பார்கள். ஆனால் சப்தமாக ஆவேச பேச்சுகள் கம்யூனிஸ்டகளிடம் உள்ளது தான்.
மார்க்சிஸ்ட் இயக்கம் எழுச்சிபெற வேண்டும். ஏழைகள், பாட்டாளி மக்களுக்காக பாடுபடும் இந்த இயக்கங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். இந்த மண்ணில் கம்யூனிஸ இயக்கங்கள் வளருவதோடு, பெரியார் இயக்கங்கள், அம்பேத்கர் இயக்கங்களும் இணைந்தால்தான் இந்த மண் சிறக்கும்.
எதிர்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் தற்போது சில எம்பிக்கள் தான் உள்ளனர். அதனை வளர்க்க வேண்டும். தனித்து போராடி பயனில்லை, போர்க்களம் கடுமையானது் இணைந்து செயல்பட வேண்டும் என சாலமன் பாப்பையா பேசினார்.