மதுரை: ராணுவ வீரர் ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்டம், அ. வல்லாளப்பட்டி பேரூராட்சி, செட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். துணை ராணுவப் படை வீரராக இருந்த இவர், மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார். அதில், தனது வீட்டின் அருகே வசிக்கும் காவலர், அவரது உறவினர் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தனது வீட்டைச் சுற்றிலும் நிற்பதால் துர்நாற்றம், கொசுத் தொல்லை ஏற்பட்டு குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

தொடர்புடைய செய்தி