இந்நிலையில் திடீரென நள்ளிரவு 2 மணியளவில் அழகர்சாமியின் வீட்டின் கதவைத் தட்டி அழகர்சாமியை வெளியே வரும்படி அழைத்த கும்பலானது சரமாரியாக ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.
இத்தகவல் அறிந்து வந்த சிலைமான் காவல்துறையினர் அழகர்சாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் தகராறு ஏற்பட்டு அதனால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டு வாசலில் வைத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல் நேற்று (மார்ச் 11) மாலை மதுரை மாவட்டம் சிக்கந்தர்சாவடி பகுதியைச் சேர்ந்த கமலேஷ் என்ற இளைஞர் சாலையில் வைத்து பொதுமக்கள் நடமாடும் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிலைமான் பகுதியில் இளைஞர் வீட்டு வாசலில் படுகொலை என 24 மணி நேரத்தில் மதுரையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் உருவாகியுள்ளது.