மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், அவர்லேண்ட் ஒப்பந்த நிறுவனத்திடம் கூடுதல் பணி செய்ததற்கான ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின்போது, இனிமேல் போராட்டம் செய்ய மாட்டோம், வார விடுப்பில் ஊதியம் கேட்க மாட்டோம் என கையெழுத்திட ஒப்பந்த நிறுவனம் கூறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மண்டலங்களில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் மெமோ கொடுத்துள்ளது. இதனை கண்டித்து, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.