மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பூங்காவில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய பொதுமக்கள், சிறுவர்கள், பெண்கள் என ஏராளமானோர் வருகை தந்து உற்சாகமாக பல்வேறு விளையாட்டுகளை விளையாடினர்.
அரையாண்டு விடுமுறை நேற்றுடன் (ஜனவரி 1) முடிவடைந்த நிலையிலும் புத்தாண்டு தினம் என்பதாலும் ஏராளமான பொதுமக்களும் சிறுவர் சிறுமியர்களும் அதிகளவில் பூங்காவிற்கு வருகை தந்து ஊஞ்சல், ராட்டிணம் ஆகியவற்றில் விளையாடி பொழுதுபோக்கில் ஈடுபட்டனர். இதேபோன்று மதுரை ராஜாஜி பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்களிலும் அதிக அளவில் மக்கள் குவிந்தனர்.