மதுரை: எய்ம்ஸ் புதிய கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்

மதுரையில் வரும் மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்துவைக்கிறார். மேலும், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும் அவர் துவக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, தேஜ கூட்டணியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த அரசு விழா மற்றும் பொதுக்கூட்டம் மண்டேலா நகரில் ஒரே இடத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய அமைச்சர் எல். முருகன் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி