மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், முறுக்கு, லட்டு போன்ற பிரசாதங்களின் விலை 15 ஆண்டுகளுக்குப் பிறகு நவ.18 முதல் 10 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த 50% விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், மஞ்சள் பை விலை 21 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.