மதுரை, தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த கனிமொழி கருணாநிதி, மக்களின் எதிர்பார்ப்புகளும், பகுதிவாரியான தேவைகளும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். சிறுபான்மையினர் நலனில் திமுக அரசு அக்கறை கொண்டுள்ளது. தற்போது மதுக்கடைகளை மூட வேண்டும் என மக்கள் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை. மதுக்கடைகள் தொடர்பான எதிர்கால கொள்கை முடிவுகள் வரவிருக்கும் தேர்தல் அறிக்கையில் விரிவாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.