இந்நிலையில் இன்று காலை பணியில் இருந்த அவர் வெயிலின் தாக்கத்தால் அங்கு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ரோடு ரோலர் வண்டியின் அடியில் அமர்ந்து செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆப்ரேட்டர் ரகுமான் அவர் கீழே அமர்ந்திருப்பதை கவனிக்காமல் ரோடு ரோலர் வாகனத்தை இயக்க முற்பட்டபோது அருகே திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு உள்ளவர்கள் வாகனத்திற்கு அடியில் ஒருவர் அமர்ந்திருக்கிறார் என்று கூச்சலிட்டனர். திருமண நிகழ்ச்சியில் அதிக சவுண்ட் உடன் பாடல் பாடிக் கொண்டிருந்ததால் இருவருக்கும் கேட்கவில்லை.
இதை கவனிக்காமல் ரோடு ரோலரை ஆப்ரேட்டர் ரகுமான் இயக்கியதால் அடியில் அமர்ந்திருந்த சூப்பர்வைசர் கருப்பசாமி தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை அறிந்த ரோடு ரோலரை இயக்கிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆப்ரேட்டர் தப்பி ஓடி தெப்பக்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாட்டுத்தாவணி காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.