மதுரை: நாகர்கோவில் - கச்சக்குடா ரயில் சேவை நீடிப்பு

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கச்சக்குடா - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது இந்த ரயில் சேவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி கச்சக்குடாவில் இருந்து ஜனவரி 3 முதல் மார்ச் 28 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 5 முதல் மார்ச் 30 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும். 

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டாடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றாடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி