நேற்றைய தினம் 6 படை வீட்டிலிருந்து முருகனின் வேல் எடுத்து வந்து மதுரையில் கட்சி அலுவலகத்தில் அதற்கான பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டை பற்றி அவதூறாக பல்வேறு அமைப்பினர் பேசி வருகின்றனர். இந்துக்களை ஒற்றுமை படுத்தவே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்ள ஏராளமானோர் வருகை தரவுள்ளனர். கிறிஸ்துவர்கள் செന்னிமலையை தங்களுடையது என கூறியது குறித்து எந்த கட்சியினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. மேலும், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தின் எதிரொலியாகவும் இந்த மாநாடு திருப்புமுனையாக அமையும் என்றார்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்