மதுரை எம்பி சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.10 உயர்ந்து 103.90க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 3.08 உயர்ந்து 95.47க்கும் விற்பனை ஆவதை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வால் ஆட்டோ, கால் டாக்சி, டெலிவரி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், ஏற்கனவே சமையல் எரிவாயு பற்றாக்குறையால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், இதன் தாக்கம் பல்வேறு தொழில்களிலும் எதிரொலித்து சிறுதொழில்கள் முடங்கிப்போகும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய அரசு தன் மக்களை பலியாக்குவதாகவும், உடனடியாக இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.