மதுரை: சுந்தர்.சி மீது பண மோசடி புகார்.. பரபரப்பு

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், அதிமுக கூட்டணி வேட்பாளரும், இயக்குநருமான சுந்தர்.சி மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. 'கலகலப்பு-3' படத்திற்காக வாங்கிய முன்பணத்தை திரும்பக் கொடுக்காமல், குறித்த நேரத்தில் படப்பிடிப்பை தொடங்காமல், சம்பள பணத்தை ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்துமாறு மிரட்டி வருவதாக தயாரிப்பாளர் மணிகண்ட ராமன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி