மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா, பெரியார் பேருந்து நிலையம் அருகே 2013ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட முதல் அம்மா உணவகத்தை ஆய்வு செய்தார். அதிமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட இந்த உணவகம், திமுக ஆட்சியில் கைவிடப்பட்டு, சிதலமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த உணவகத்தை மேம்படுத்தி விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தனது கடமை என முஸ்தபா தெரிவித்தார்.