மதுரை கிழக்கு தொகுதி சிறப்பான தொகுதி என்றும், தென்மாவட்டத்தில் 58 தொகுதிகளில் 53 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை தோற்கடிக்க வேண்டும் என்றும், அதிமுக எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு முடிந்துவிட்டது என்றும் அவர் கூறினார். புதிதாக கட்சி தொடங்குவது பெரிய விஷயம் இல்லை என்றும், மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் 15 வயதுடையோர் அதிகமாக இருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.