மதுரை: மெட்ரோ ரயில் திட்டம்; பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு முடக்கியதை கண்டித்து, மதுரை மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக வருகிற 21 ஆம் தேதி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் பி. மூர்த்தி, கோ. தளபதி எம்எல்ஏ, மு. மணிமாறன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு. க. ஸ்டாலின் முயற்சியால் தயார் செய்யப்பட்ட திட்ட அறிக்கை ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஜிஎஸ்டி நிதி பகிர்வில் பாரபட்சம், கல்வி நிதி ஒதுக்க மறுப்பு போன்ற செயல்களுக்குப் பிறகு, தற்போது மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தையும் ஒன்றிய அரசு முடக்கியுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி