மதுரை: மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருத்தணியைச் சேர்ந்த 22 வயது மருத்துவ மாணவர் பவன்குமார், மதுரையில் தல்லாகுளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி