மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு தாராபுரம் கிளை ஓட்டுநரை, ஆரப்பாளையம் பேருந்து நிலைய மேலாளர் செருப்பால் அடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்த சூழலில், மேலாளர் உத்தரவின்றி பேருந்தை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக எடுத்துச் செல்ல முடியாது என்றும், மேலாளரிடம் அனுமதி வாங்கி வர பயணிகளிடம் ஓட்டுநர் தெரிவித்தார். "பயணிகளை தூண்டி விடுகிறாயா" என்று கூறி செருப்பால் அடித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.