மதுரை: மதயானைக்கூட்டம் திரைப்பட இயக்குனர் உயிரிழப்பு

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விக்ரம் சுகுமாரன். ஆடுகளம் படத்தில் வெற்றிமாறனுக்கு துணையாக இருந்தார். ஆடுகளம் வெற்றிக்கு விக்ரம் சுகுமாரன் பெரிய காரணம் என வெற்றிமாறன் கூறிவந்தார். இதனைத் தொடர்ந்து விக்ரம் சுகுமாரன் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் விக்ரம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். 

அதன்பின், 6 ஆண்டுகள் கழித்து நடிகர் சாந்தனுவை வைத்து 'ராவணக்கோட்டம்' என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் நேற்று சொந்த ஊரான மதுரைக்குச் சென்று தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்துக்கான கதையைச் சொல்லிவிட்டு பேருந்தில் ஊர் திரும்பும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் காலமானதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி