மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரத் திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் 12ஆம் நாள் நிறைவு நாளான இன்று (மே 10) இரவு சுவாமியும் அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் பவனி நடைபெற்றது. இந்நிகழ்வின் போது மாசி வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து சுவாமியையும் அம்மனையும் தரிசனம் செய்தனர்.