மதுரை: ஜல்லிக்கட்டில் 17 பேர் காயம்; அதிர்ச்சி

மதுரை சக்குடி முப்புலிசுவாமி கோயிலின் மாசி உற்சவத்தை முன்னிட்டு ஜல்லிகட்டு திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இன்று நடந்த ஜல்லிக்கட்டு திருவிழா பேரவைத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக வீரவிளையாட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகரனின் சொந்த ஊரான சக்குடி கிராமத்தில் வருடம்தோறும் மாசி களரியை முன்னிட்டு ஜல்லிகட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இன்று ஜல்லிக்கட்டுப் போட்டியில் 800 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். காளைகளும், மாடுபிடி வீரர்களும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனர். 

வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் வழக்கமாக கட்டில், பீரோ, குத்துவிளக்கு, அண்டா, ரொக்கப்பரிசு உள்ளிட்டவைகள் வழங்கப்படும். ஆனால் இந்தாண்டு பரிசுகள் வழங்கப்படவில்லை. பாரம்பரிய முறைப்படி காளைகளுக்கும் வீரர்களுக்கும் வேட்டித்துண்டு மட்டுமே வழங்கப்பட்டது. 30 நிமிடத்திற்கு ஒரு சுற்று என கணக்கிட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஜல்லிகட்டு விழாவை முன்னிட்டு மதுரை ஊமச்சிகுளம் டி.எஸ்.பி சந்திரசேகரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை நான்காவது சுற்று முடிவில் இதுவரை 17 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி