பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுபாஸ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன், தனது மகன் வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமினில் வந்து கையழுத்திட்டு வந்தார். அப்போது கிளாமர் காளி கொலை நடந்துவிட்டதால் எனது மகன் வெளியில் வந்தால் கிளாமர் காளி கொலை வழக்கில் கைது செய்துவிடுவார்கள் என உளவுத்துறை காவலர் கூறியதால் சுபாஸ் சந்திரபோஸ் வெளியூரில் இருந்தார்.
ஆனால் திட்டமிட்டு தனது மகனை வேறு இடத்தில் கொன்றுவிட்டு மதுரையில் என்கவுண்டர் என்பது போல காவல்துறையினர் திட்டம் தீட்டிவிட்டனர் எனவும், உரிய விசாரணை முடியும் வரை உடலை பெறமாட்டோம் என்றார். காவல்துறையினர் உறவினர்களான எங்கள் இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தி வருகிறது என்றார்.
சுபாஸ் சந்திரபோஸ் திருந்தி வாழ்வதாக காவல்துறையினரிடம் தெரிவித்த நிலையில் திருமண ஏற்பாடுகள் செய்தோம், சுபாஸ் சந்திரபோஸை என்கவுண்டர் செய்துவிட்டதாக தெரிவித்தார். தனது மகன் தவறே செய்திருந்தாலும் காலில் சுட்டிருக்கலாம் எதற்காக கொல்ல வேண்டும், திட்டமிட்டு எனது மகனை காவல்துறையினர் கொலை செய்துவிட்டனர் என குடும்பத்தினரும் குற்றம் சாட்டினர்.