இந்த இடைக்காலத் தடையை நான் வரவேற்கின்றேன். கம்யூனிஸ்ட் கட்சி என்பது தற்போது கார்ப்பரேட்டாக மாறிவிட்டது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு, பள்ளி மாணவி மரணம் வழக்கு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாலியல் பிரச்சனைகள் குறித்து பாலியல் பேசாத கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு அவப்பேர் ஏற்படுத்தி என்னை இழிவுபடுத்த வேண்டும் என்கிற நோக்கம்தான் உங்களது நோக்கம்.
தாத்தா ஜீவானந்தம் சங்கர் ஐயாவோடு கம்யூனிஸ்ட் செத்துப் போச்சு. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது பெற்ற விழுக்காட்டை விட தற்போது ஆறு இடங்களில் தான் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளனர். கம்யூனிஸ்ட் தலைவர்களை எனக்கு பிடிக்கும் ஆனால் தற்போது அவர்களுடைய செயல்பாடுகள் தான் பிடிக்கவில்லை என்றார்.