மதுரை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொகுதி பகுதியில் அமைந்துள்ள 25 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையும் ஏற்கூடி அச்சம்பத்து எஸ்.வி.கே நகரில் அமைந்துள்ள பூங்காவிற்கு 10 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேச்சில், மக்களுக்கு உண்மையான விடியல் மேற்குத் பகுதியில் ஏர்குடி அச்சம்பத்து தங்கமணி நகர் போக்குவரத்துக்கு செய்து கொடுத்திருக்கிறேன். 

அமைச்சர் பொன்முடி எப்போது பெண்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் இழிவாக பேசுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு அரசாங்க பணத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மக்கள் படுகிற துயரத்தை முதல்வரிடம் எடுத்துக் கூற ஆளில்லை. மக்கள் கஷ்டம் முதல்வருக்கு லேட்டாகத் தான் தெரியும். இந்த மக்களும் சாதாரண இளைஞர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை திமுக தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அடுத்த முதல்வர் எடப்பாடி தான் என்ற எண்ணம் எழுந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி கோட்டையில் நீட் தேர்வு குறித்து அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி மக்களை திசை திருப்புகிறார்கள். நீட் தேர்வு குறித்த கூட்டம் இதெல்லாம் ஏமாற்று வேலை என்றார்.

தொடர்புடைய செய்தி