மதுரை: மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

மதுரை சா்வேயா் காலனியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மேயா்  இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் துணை மேயா், மண்டலத் தலைவா், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்கின்றனா். 

எனவே, கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட ஆனையூா், பாா்க்டவுன், நாகனாகுளம், அய்யா் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பகம் நகா், பரசுராம்பட்டி, லூாா்து நகா், ஆத்திக்குளம், கோ. புதூா், வள்ளுவா் குடியிருப்பு, எஸ். ஆலங்குளம், அலமேலு நகா், கூடல்நகா், மேலமடை, பாண்டிகோவில், சௌராஷ்டிராபுரம், தாசில்தாா்நகா், வண்டியூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா், புதை சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில் வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என மாநகராட்சி அலுவலகம் செய்திக் குறிப்பு வெளியீட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி