தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாவது: - இந்தாண்டு நிதி நிலை அறிக்கை இந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு அதற்குப் பிறகு துறை தோறும் மானிய கோரிக்கைகள் மாநில சட்டமன்றத்திற்கு சமர்ப்பிக்க உள்ளோம்.
அமைச்சர்கள் எல்லாம் மாநகராட்சிகளுக்கு இணைந்த துறையாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கை வருவதற்கு உதவும் வகையில் அதை சமர்ப்பிக்க உதவும் வகையில் இந்த நேரத்தில் இத்தகைய நிகழ்வை நடத்துகிறோம்.
எனவே மாநில அளவில் நிதியை ஒதுக்கி ஒரு மாபெரும் முயற்சியாக எடுக்க வேண்டிய பணிகளை கண்டறிந்து அதை அமைச்சர் நேரு மற்றும் துறை செயலாளர் கார்த்திகேயன் அவர்களிடம் வழங்க இருக்கிறோம். இதனை இந்த ஆண்டு நிதி ஒதுக்கி இந்த பணியை செய்வதற்கு உதவுங்கள் என்று கோரிக்கை வைக்க உள்ளோம் என்றார்.