மதுரை மாவட்டம் விராலினூர் ஊராட்சிக்கு உட்பட்ட குசவப்பட்டி, காஞ்சிரங்குளம் பகுதியில் கிரஷர் குவாரி அமைப்பதற்கு கனிமவளத்துறை சார்பில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அந்த பகுதியில் கிரஷர் குவாரி அமைப்பதற்கான பணிகள் நடைபெற தொடங்கியுள்ளன. இதன் காரணமாக குசவப்பட்டி, காஞ்சிரங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு அருகிலேயே கிரஷர் குவாரிக்கான பள்ளம் தோண்டப்படுவதால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மல்லிகைப்பூ, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் வீணாகி சேதம் அடைந்து வருவதாகவும், மேலும் தூசி வெளியேறுவதால் பொதுமக்கள் வசிக்க முடியாத சூழல் உருவாகுவதோடு நிலத்தடி நீரும் கீழே செல்லும் என்பதால் விவசாயம் பாதிக்கப்படும் என கூறி ஏற்கனவே போராட்டம் நடத்திய நிலையிலும் காவல்துறையில் புகார் அளித்த நிலையிலும் தற்போது வரையும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அரசு அனுமதித்துள்ள கிரஷர் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தனர்.