இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் லோகநாதன் கூறுகையில், "மதுரை மாநகர் காவல் நிலையங்களில் திருட்டு போன, தவறவிட்டதாக கிடைக்கப் பெற்ற புகார்களின் அடிப்படையில் மாநகர் காவல்துறையினரும் சைபர் கிரைம் போலீசாரும் இணைந்து 278 செல்போன்களை மீட்டுள்ளனர். காவல்துறையினர் செல்போன் தொலைந்துவிட்டது என வரும் மக்களிடம் முறையாக புகாரை பதிவு செய்வதால் 15 நாட்கள் முதல் 2 மாதத்திற்குள் செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னமும் இதனை சிறப்பாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன," எனக் கூறினார்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!