மதுரை: மாநகராட்சி வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் குப்பை லாரிகள் மற்றும் பல்வேறு கழிவுகளை அகற்றக்கூடிய டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்காக கடந்த 17 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் ஓட்டுனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொடர்ந்து, இம்மாதம் வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்காமல் குறைந்த ஊதியத்தை கொடுத்ததால் ஆத்திரமடைந்த ஓட்டுனர்கள், செல்லூர் பகுதியில் உள்ள மாநகராட்சி வாகன பிரிவு அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒப்பந்ததாரர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் மாநகராட்சி வாகன ஓட்டுனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, 17 ஆண்டுகளாக மாநகராட்சியில் குப்பைகழிவுகளை அகற்றும் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு கீழ் ஓட்டுநர்களாக பயன்படுத்தப்பட்டு தினமும் பணி செய்து வருகின்றோம். இந்த நிலையில் ஒப்பந்த நிறுவனமும் உரிய விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது இல்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து, நாங்கள் குப்பை அள்ளும் வாகனங்களை ஓட்டும் போது பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதாகவும், முறையான உபகரணங்கள் கொடுக்காமல் இருப்பதால் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கும் ஆளாகி வருகிறோம் என்ற மனவேதனையும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி