திருச்சியில் நேற்று (பிப். 21) நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் சீமான், மதுரை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். மேலூர் தொகுதியில் கோட்டைக்குமார், மதுரை கிழக்கு தொகுதியில் செல்வம், சோழவந்தான் தொகுதியில் நாகலட்சுமி திருமாறன், மதுரை வடக்கு தொகுதியில் வி. திருநாவுக்கரசு, மதுரை தெற்கு தொகுதியில் சுமதி, மத்திய மதுரை தொகுதியில் அப்துல் ஹக்கிம், மதுரை மேற்கு தொகுதியில் சோ. விக்னேஷ் குமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் சத்யா தேவி, திருமங்கலம் தொகுதியில் முனீஸ், உசிலம்பட்டி தொகுதியில் அபிராமி தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.