மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மே 4ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இதற்காக, மேலுார், கிழக்கு தொகுதிகளுக்கு ஒத்தக்கடை விவசாயக் கல்லுாரி, சோழவந்தான், உசிலம்பட்டிக்கு கீழக்குயில்குடி அண்ணா பல்கலை, வடக்கு, தெற்கு தொகுதிகளுக்கு தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மத்தி, மேற்கு தொகுதிகளுக்கு மதுரைக் கல்லுாரி, திருப்பரங்குன்றம், திருமங்கலத்திற்கு கப்பலுார் அரசு கல்லுாரி ஆகிய கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணும் பணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.