தீபாவளி திருநாளான இன்று (அக். 31) மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு வைரத்திலான கிரீடம், தங்கத்திலான கவசம் மற்றும் சாமிக்கு வைரபட்டை அணிவிக்கப்பட்டு மாலையில் சொக்கருக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு16 வகை தீபங்களில் தூபம், மகாதீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருட்சப தீபம், புருஷா மிருக தீபம், ஓலதீபம், கமடதி தீபம், கணு தீபம், வியான்ர தீபம், சிம்ம தீபம், துவஜ தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம் ஆகிய 16 வகை தீப ஆராதனைகள் செய்விக்கும் தீபாவளி தர்பார் காட்சி நடைபெறுகிறது.
இன்று (அக். 31)வியாழன்
காலை 7. 00 மணி முதல் 10. 30 மணி வரை
மாலை 4. 30 மணி முதல் 7. 00 மணி வரை இந்த சிறப்பு தரிசனத்தை காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.