மதுரை: ஆகாஷ் மரணம்.. காவல்துறையினரை கைது செய்ய கோரிக்கை

மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காயமடைந்தாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது உடல் 68 நாட்களாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் உள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் சனநாயக இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட காவல்துறையினர் கைது செய்யவும் இது தொடர்பாக விரைவில் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி