இதைத் தடுக்க முயற்சித்த இருளாயியையும் அவர் கோடாரியால் தாக்கினார். இதில் அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து முருகன் மீது வில்லூர் காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் 5-ஆவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் டி. ராஜேந்திரன் முன்னிலையாகி வாதிட்டார்.வழக்கு விசாரணையின் நிறைவில், முருகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார்.