மதுரை மாநகராட்சியில் 15 நிமிடத்தில் நடந்து முடிந்த மாமன்ற கூட்டம்

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு நேற்று (பிப்.10) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதம் ஏதும் இன்றி 136 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, 2026-27 ஆம் நிதியாண்டுக்கான உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2026-27 ஆம் நிதியாண்டுக்கான மொத்த வரவாக 1 கோடியே 45 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயும், மொத்த செலவாக 1 கோடியே 45 லட்சத்து 931 ரூபாயும் காண்பிக்கப்பட்டு, 887 ரூபாய் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மாமன்ற கூட்டம் வெறும் 15 நிமிடங்களில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி