தமிழக அரசு இன்று (மே 29) 30 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றங்களின் ஒரு பகுதியாக, மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த பிரவீன்குமார் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகவும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி உத்தரவு அதிகார வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.