இந்தநிலையில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தல்லாகுளம் பகுதியிலிருந்து பேரணி நடைபெற்றது. அப்போது வாகனங்கள் செல்வதற்கு காவல்துறையினர் தடைவிதித்த நிலையில் பேரணியின்போது திடீரென ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதற்கு உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வழிவிட்டபோது அதேபேரணி நடுவே மாவட்ட ஆட்சியர் சங்கீதாவின் காரும் வந்ததால் சிறிதுநேரம் சலசலப்பானது.
பேரணி நடுவே வந்ததுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். மாற்றுப்பாதையில் செல்லாமல் பேரணியின் நடுவே வருவது ஏன் எனவும், பேரணி நடப்பதை காவல்துறையினர் அறிவுறுத்தவில்லையா இல்லை காவல்துறையினர் கூறியும் பேரணி நடுவே ஆட்சியர் வந்தாரா என்று கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் இடையே மோதல்போக்கு நிலவிவரும் நிலையில் மாவட்ட ஆட்சியரின் வாகனம் சென்ற சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.