மதுரை சிந்தாமணி கிராண்ட் ஹோட்டலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய பாரம்பரிய முறைப்படி 300 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கேக் தயாரிக்கும் விழா நடைபெற்றது. இதில் ஜெர்மனி, ஸ்வீடன், இத்தாலி நாட்டினர் பங்கேற்றனர். 80 கிலோ உலர் பழங்கள், உயர்ரக மதுபானங்கள் கலந்து 30 நாட்கள் பதப்படுத்தப்பட்ட கலவை இந்த கேக்கில் சேர்க்கப்படும். மேலாளர் இளங்கோ ராஜேந்திரன் கூறுகையில், கேக் பண்டிகை தினங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றார்.