தேரோட்ட தொடக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் மற்றும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டார்கள். நான்கு மாசி வீதிகளில் வலம் வரும் தேரினை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். நான்கு மாசி வீதிகளில் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான மக்கள் கண்டு மகிழ்ந்து வருகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் நான்கு மாசி வீதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சாதாரண உடையணிந்த போலீசார் குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களை கண்காணிப்பு செய்து வருகின்றனர். தேர் நிலைக்கு வர நண்பகல் ஆகும் என தெரிகிறது.