மதுரை: செல்போன் திருடியவர் கைது

செல்லூரில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர், நரிமேடு பகுதியில் உள்ள டிபன் சென்டரில் வேலை செய்து வருகிறார். கடந்த பிப். 4ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, பிரிட்ஜ் மீது செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது செல்போன் மாயமாகி இருந்தது. இது குறித்து செல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் அமலநாதன்(25) என்பவர் செல்போனை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி