மதுரை மத்திய சிறையில் சிறைவாசி செல்வபாண்டி அறையில் செல்போன் பயன்படுத்தியதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிம்கார்டு, பேட்டரியுடன் கூடிய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், தண்டனை சிறைவாசிகளான முத்து இருள் மற்றும் குமார் ஆகியோர் செல்வபாண்டிக்கு செல்போன் வாங்கி கொடுத்தது தெரியவந்தது. நீதிமன்ற விசாரணைக்கு சென்றபோது முத்து இருள் தனது ஆசன வாயில் மறைத்து செல்போனை சிறைக்குள் கொண்டு வந்ததும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து மூவர் மீதும் கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.