மதுரை: போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது வழக்குப் பதிவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரை தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை அருகில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி சாலைமறியலில் ஈடுபட்டதால் 85 பாஜகவினர் மீது மதுரை தல்லாகுளம் கால்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக அனுமதியின்றி கூட்டமாக சேர்வது, போக்குவரத்திற்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி