மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா (21) என்பவர் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றபோது திருடு போனது. இதுகுறித்து கரிமேடு போலீஸார் விசாரித்ததில், ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அன்பரசன், கபில்தேவ், அலெக்ஸ்குமார் ஆகிய மூவர் வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.