மதுரை மாவட்டம் ஆண்டார்கொட்டாரம் அய்யனார் நகரில் ரகுபதி என்பவருக்குச் சொந்தமான பேக்கரியில், சந்தோஷ், சுந்தரபாண்டி உள்ளிட்ட மூன்று பேர் மதுபோதையில் புகுந்து, கல்லாப்பெட்டியில் எச்சில் துப்பி, பொருட்களை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ரகுபதி கருப்பாயூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மதுபோதையில் சென்ற கும்பல் பேக்கரியை அடித்து நொறுக்கி கொலை மிரட்டல் விடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.